புதன், ஆகஸ்ட் 2

காவி காதல்




அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அம்மண மாக்கப்பட்டார்கள்
அவர்கள் தலித்தென்பதால்

கண்களால் கனிவது
காதல் உணர்வு
அம் மனஉறவை
அச்சப்படுத்துதல் முறையோ


அயோத்தி இராமனின் 
அக்கினி பரிட்சையில்
அவளுக்கு கிடைத்தது
கற்புக்கரசி பட்டம்

யோகி ஆதியநாத்
காவி ஆட்சியில்
காதலை கருக்கி
காப்பது சாதியை

மதங் கொண்டவர்கள்
மனித உயிர் வதைக்க - நீ
வேடிக்கை பார்க்கவா
வினை ஆற்றவா

மதங்களுக்கு மரணமும்
சாதிகளுக்கு சமாதியும்
காதலால்தான் சாத்தியம் - ஆக
காதல் செய்வீர்

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எழுத்துக்கள் உருமாறியுள்ளன
படிக்க இயலவில்லை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மதங்கொண்ட யானையைவிட
மதங்கொண்ட மனிதர்கள் ஆபத்தானவர்களாக மாறி வருகிறார்கள்
வேதனை

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...