வியாழன், ஜூலை 28

லிபியா - கடாபி

இது எனக்கு வந்த மின்னஞ்ஞல்

Did you know this about Libya?

Some other facts (that mainstream media will never disclose) about Gaddafi and Libya

- Loans to Libyan citizens are given with NO interest.

- Students would get paid the average salary for the profession they are studying for.

- If you are unable to get employment the state would pay the full salary as if you were employed until you find employment.

- When you get married the couple gets an apartment or house for free from the Government.

- You could go to college anywhere in the world. The state pays 2,500 euros plus accommodation and car allowance.

- The cars are sold at factory cost.

- *Libya does not owe money, (not a cent) to anyone. No creditors.

- Free education and health care for all citizens.

- 25% of the population with a university degree.

- No beggars on the streets and nobody is homeless (until the recent bombing).

- Bread costs only $0.15 per loaf.

No wonder the US and other capitalist countries do not like Libya.

Gaddafi would not consent to taking loans from IMF or World Bank at high interest rates.

In other words Libya was INDEPENDENT!       That is the real reason for the war in Libya!

He may be a dictator, but that is not the US problem.

Also Gaddafi called on all Oil producing countries NOT to accept payment for oil in USD or Euros.

Two other leaders that have the courage to speak the truth are Hugo Chavez of Venezuela and Mahmoud Ahmedinejad of Iran and though both are fighting an uphill battle courtesy the cowardly Saudis who'd rather live in luxury while their people wallow in poverty, the battle is intensifying - the hypocrisy of the West is gradually being exposed.

Gaddafi recommended that oil get paid for in GOLD and that would have bankrupted just about every Western Country as most of them do not have gold reserves to match the rate at which they print their useless currencies and cheat the world.

செவ்வாய், ஜூலை 26

2800 நிறுவனங்கள் காணவில்லை

கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள்  காணவில்லை.  ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளைதான் நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்.    மேற்கண்ட 2800 நிறுவனங்களின் பங்குகளை நீங்கள் வைத்திருந்தால் தற்போது எதற்கும் உதவாது.   உதாரணம் DSQ Software, Pentafour, Pryamid Saimira,

இவர்கள் பங்கு சந்தையில் பட்டியலிட்டு நுழைந்தபோது அதிக அளவு வரவேற்பு இருந்தது.   அவர்கள் தேவைக்கு அதிகமாக அதாவது 2 அ 3 மடங்கு தொகை வசூலானது.  இப்போது சீந்துவாரில்லை.

ஏறக்குறைய 1640 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன இதில் 876 நிறுவனங்கள் கட்டாயமாக பங்கு சந்தை பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.  பங்கு வர்த்தகம் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் 1196.

compulsory delisted companies are Femnor Minerals, Lloyd Cements, Western Paques and CRB Capital.


பங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமான செபி மேற்கண்ட நிறுவனங்களை கட்டாயமாக பட்டியிலிருந்து நீக்குகிறது.   அதற்கு ஆயிரம் காரணங்கள் கேட்டு அவை திருப்தி அளிக்காத பட்சத்தில்தான் இந் நடவடிக்கை


கட்டாய நீக்கம் ஏற்பட்டால் முதலீட்டாளகளிடமிருந்து பங்குகளை வெளியீட்டாளர் நிறுவனத்தார்  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் பங்குதாரர் விரும்பும் பட்சத்தில்.


சரி இதெல்லாம் சட்டம், செபி, ஏற்கனவே செய்திதாளில் வந்தவை
ஏன் என்று கேள்வி கேளுங்கள்?  நிறைய விஷயங்கள் உள்ளன


நிறுவனங்கள் ஏன் பங்கு சந்தைக்கு வருகின்றன?
ஏன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன?
செபி என்ன செய்து வருகிறது?
பங்குதாரருக்கு இழப்பீடு ஏற்பட்டால் செபி உதவுமா?




நிறுவனங்கள் முன்பெல்லாம் பொதுமக்கள் பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்தன.  அதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.  மாதந்தோறும் வட்டி,  இருப்பு கணக்கு, நீதிமன்றம் மற்றும் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சமர்ப்பித்தல், நிறுவனத்தை மூடிய பிறகும்.  அதிலிருந்து மீள கண்டுபிடித்த வழிதான்


பங்கு சந்தையில் நிதி திரட்டுதல், Initial Public Offer (IPO) Rights Issue  போன்றவை.


இங்கே பங்கு விலை நிர்ணயம் என்பது அவர்களின் சொத்து மதிப்பை பொறுத்து மட்டுமல்ல, அரசியல் தொடர்பு, பொதுமக்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் நன்மதிப்பு,  செயல்பாடு, கையிலுள்ள ஆர்டர்கள் மற்றும் பல காரணங்களை கொண்டு மதிப்பிடப்படுகிறது


ஆனால் பாதகங்கள் பற்றி ஒரிரு வரியோடு முடித்துக் கொள்கிறார்கள்.


ஆண்டுக்கொரு முறை டிவிடண்டு கொடுத்தால் போதும்,  ஆனால் நிறுவனங்கள் பெரும்பாலும் கொடுப்பதில்லை.   கொடுப்பதற்கு ஏதுமில்லை.  அல்லது மனமில்லை.  இரண்டு மூன்று ஆண்டுகளில் நிறுவனமே இருப்பதில்லை கொள்ளையடித்த 200 கோடியானாலும் 5000 கோடியானாலும்  ஏமாந்தது பொதுஜனம்.  எந்த நிறுவனம் தண்டனை பெற்றிருக்கிறது பங்கு சந்தையில் ஏமாற்றி


இதே 200 கோடி வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால் எத்தனை ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.   வட்டி கட்ட வேண்டும்,  அடமானமாக சொத்து வேறு தர வேண்டும்.  தன் பொறுப்பு காப்புறுதி தர வேண்டும்.  இதன் மூலம் அவர்களின் சொந்த சொந்துகளை நீதிமன்றம் மூலம் ஏலமிடலாம்  ஆனால் பங்கு சந்தையில் இவை ஏதுமில்லை.   செபிக்கு மட்டும் சில தகவல்கள் தர வேண்டும்.  அதை கொடுக்க முடியாமலே சில நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன.


ஒருநிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த நிறுவனம்மூலம் பினாமி பெயரில் மீண்டும் பங்கு சந்தையில் நிதி திரட்ட புறப்பட்டுவிடுவான் முதலாளி,  மறுபடியும் ஏமாற தயாராக இருப்பான் முதலீட்டாளன்


இதிலிருந்து தப்பிக்க என்ன வழி முதலாளிக்கு ஆயிரம் வழி, சிறு முதலீட்டாளருக்கு பட்டை நாமம்





திங்கள், ஜூலை 25

எங்கள் அடுக்ககத்தில் முஸ்லிம்

பிராமணர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் நானே சைவம் என்றுதான் குடி புகுந்தேன்.  கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அங்கே அசைவம் சமைத்ததில்லை.  தேவைப்படும் போது கடைக்குச் சென்றோ, எனது அம்மா வீட்டிற்கோ சென்று சாப்பிட்டுக் கொள்வோம்

அடுத்த மதத்தவர் எப்படி வந்தார், அதுவும் அவருக்கு பக்கத்து வீட்டுக்காரர் புஜை, புனஸ்காரம், பஜனை என இருப்பவர். சலவை செய்து கொடுக்கும் நபர் வந்தார் அத்தனை விடயத்தையும் தெரிவித்தார்.

வீட்டுக்கு சொந்தக்காரர் தமிழ்நாட்டிலேயே இல்லை.  அவருக்கு வேண்டியது பணம்.  ஆனால் ஆச்சாரம்.   ஆம் என்னிடம் உறுதிமொழி வாங்கியது போல நம் முஸ்லிம் குடும்பத்திடமும் வாக்குறுதி பெறப்பட்டுள்ளது.   அவர்கள் அசைவம் சமைக்க மாட்டோம் என தெரிவித்து குடி வந்ததுள்ளனர்.

என்ன செய்வது அவாள் இடத்தில் அவாள் சொல்படி நடக்க வேண்டியிருக்கிறது,   நமது சௌகரியங்கள் பிறகுதான்

எங்கோ ஒரு குரல்

யார் உன்னை அவாள் இடத்திற்கு போக சொன்னது ?........... 

 

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 8


அடமான சொத்து விற்பனை

சொத்து கையகப்படுத்துதல் அறிவிக்கை வெளியிட்டு முப்பது நாட்கள் கழித்து சொத்து விற்பனை செய்ய அறிவிக்கை வெளியிடலாம் என ஏற்கனவே பார்த்தோம்.  அதன் படி வங்கி சொத்து விற்பனை தொடர்பாக செய்தி தாளில் விளம்பரம் வெளியிடும் அது தமிழ் மற்றும் ஆங்கில செய்தி தாளாக இருக்கும். இதற்கும் ரூ. 25000 முதல் ரூ.50000 வரை ஆகும்.  இந்த செலவும் கடன்தாரர் தலையில்.

மேற்படி சட்டம் கீழ்கண்ட விற்பனை முறையை அங்கீகரிக்கிறது.  ஆயினும் பெரும்பான்மையான வங்கிகள் பொது ஏல முறை அல்லது சீலிட்ட டெண்டர் முறையில் அதிக விலை கோருபவருக்கு தீர்மானித்து விற்பனை செய்கிறது.

·         பொது ஏலம் மற்றும் விலைபுள்ளி கோருதல்
·         கடன்தாரர் ஒப்புதலுடன் விற்பனை
·         தனிப்பட்ட விற்பனை
·         மூன்று விலைபுள்ளி கோரி விற்பனை

பொது ஏலம் மற்றும் விலைபுள்ளி கோருதல்

அனைத்து வங்கிகளும் சொத்துக்களை விற்பதற்கு இந்த முறையையே கையாளுகின்றனர்.  எங்கு எப்படி உள்ளதோ அவ்வாறே விற்பனை (as is what basis  and as it where basis) என்று விளம்பரம் செய்து விற்பனை செய்வர்.  விளம்பரம் செய்து 30 நாட்கள் கழித்தே சொத்து விற்கப்படும்.  

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர் குறைந்தபட்ச ஏலத் தொகையில் 10தொகையை முன் வைப்பு தொகையாக வங்கி வரைவு மூலம் செலுத்த வேண்டும்.  நிராகரிக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு அத்தொகை அதாவது வங்கி வரைவோலையை உடனடியாக திருப்பி தந்து விடுவர்.

விற்பனை தேதியன்று கடன்தாரர் பணம் செலுத்தினால், விற்பனை நிறுத்தி வைக்கவும், விற்பனையை ரத்து செய்யவும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.  எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் விற்பனையை தள்ளி வைக்கவோ நிறுத்தவோ அவருக்கு அதிகாரம் உண்டு.  

ஒரு சொத்தின் குறைந்தபட்ச விலை ரூ.10 இலட்சமாக வங்கி நிர்ணயிக்க,   வங்கி 5 விலை புள்ளிகளை பெற்றிருக்கிறது.   அதை சமர்பித்தவர்கள் முன்னிலையில் திறப்பார்கள்.   பொது ஏலம் எனில் அதிக விலை கோரியவரின் தொகையிலிருந்து ஏலம் தொடங்கும்  உதாரணமாக ஐந்தில் ஒருவர் ரூ. 11 இலட்சம் என கோரியிருந்தால் அதிலிருந்து ஏலம் தொடங்கும்.  முடிவில் அதிகபட்ச தொகை கோருபவருக்கு விற்பனை உறுதி கடிதம் வழங்கப்படும். வெற்றிப் பெற்ற ஏலதாரர்   ஏலத்தொகையில் 25 அன்றே செலுத்த வேண்டும்.  மீதமுள்ள 75தொகையை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். 

பொதுவாக ஒரிரு நாட்கள் தள்ளி போனால் வங்கிகள் 75தொகையை பெற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால் சில அதிகாரிகள் 15 நாட்களுக்குள் அத் தொகை செலுத்தப்படவில்லையெனில்  ஏலத்தை ரத்து செய்வதோடு நீங்கள் செலுத்திய 25தொகையை (forfeit) திருப்பி தர இயலாது சட்டப்படி கடிதம் அனுப்புவர்.  எனவே வங்கி மூலம் சொத்து வாங்குபவர் இதில் கவனமாக இருக்க வேண்டும்

முழு தொகையும் செலுத்திய பின்பு வங்கி விற்பனை சான்றிதழ் (Sales Certificate) வழங்கும்.  தங்களுக்கு வசதியான ஒரு நாளில் பத்திர பதிவு அலுவலகத்தில் முத்திரைக் கட்டணம் செலுத்தி சொத்தை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். வங்கியின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவார். அதற்கான கட்டணம் மற்றும் செலவுத் தொகையை ஏலதாரர்  ஏற்க வேண்டும். 

மேற்படி சட்டத்தின் படி விற்பனை சான்றிதழ் (Sales Certificate) மட்டும் போதும்.   அதை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால்  பத்திரப் பதிவு அலுவலத்தில் தங்கள் பெயர் இடம் பெறாது. வில்லங்க சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களில் முந்தைய சொத்துடமையாளர் பெயர் இருக்கும்.  மேலும் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க பதிவு செய்து கொள்வது நலம்.




முழு பணம் செலுத்தியவுடன் தங்களுக்கு வங்கி தன்னிடம் அடமானம் வைக்கப்பட்ட சொத்து பத்திரம் மற்றும் அதன் தாய் பத்திரம், சிட்டா, அங்கல் மற்றும் அதன் இணைப்பு ஆவணங்களை உங்களிடம் வழங்குவர்.  அதோடு குறிப்பிட்ட சொத்தை உங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.  இதன்மூலம் சொத்து உங்கள் வசம் வருகிறது.  

கடன்தாரர் ஒப்புதலுடன் விற்பனை

தங்களுக்கு ஒரளவு பொருள் விளங்கும், இருப்பினும் இதை சற்று பார்ப்போம். இங்கு கடன்தாரர் சொத்தை வாங்கும் விருப்பமுள்ள நபரை அவரே தேர்ந்தெடுத்து அவருக்கு அடமான சொத்தை குறிப்பிட்ட விலைக்கு விற்பதற்கு தனக்கு ஆட்சேபனை ஏதம் இல்லை என எழுத்து மூலம் வங்கிக்கு தெரிவிக்கிறார்.  வங்கியும் தனக்கு எவ்வித இழப்பும் இல்லாத பட்சத்தில் இதை அங்கீகரித்து கடன்தாரர் சார்பில் விற்பனை பத்திரம் செய்து கொடுக்கும் மேற்கண்ட முறையில் விவரிக்கபட்டுள்ளபடி.

இதனால் வங்கிக்கு என்ன நன்மை, கடன்தாரருக்கு என்ன நன்மை.  வங்கிக்கு ஒரு கணக்கு அதிக தொந்தரவுகளின்றி முடிவடைகிறது.  கடன்தாரருக்கு  சொத்து வாங்கியவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் பணம் பெற வாய்ப்பிருக்கிறது.

தனிப்பட்ட விற்பனை

வங்கியானது ஒரு சொத்தை விற்க முயற்சி செய்கிறது.  அது ஓன்று மேற்பட்ட தடவை தோல்வியடைகிறது.  அதாவது  அடமான சொத்தை யாரும் வாங்க முன் வரவில்லை.

இவ்வாறான சமயங்களில்  முந்தைய குறைந்தபட்ச விலையை காட்டிலும் 10℅  குறைத்து விற்க முயற்சி செய்வர்.  அவ்வாறு போகாத நேரத்தில்.  யாராவது வங்கியை அணுகி தனக்கு மட்டுமே கிடைக்கும் பட்சதில் வங்கிக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கும்பட்சத்தில் இவ்வாறான விற்பனையை முடிவு செய்வர்.

இந்தமுறை விற்பனையில் விளம்பரம் தவிர்க்கப்படும்.  ஆனால் கடன்தாரருக்கு ஒரு அறிவிக்கை அனுப்பப்படும்.  அதில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் அதைவிட கூடுதல் தொகை யாரேனும் இருந்தால் அவர்களை கடன்தாரர் வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம் என தெரிவிப்பார்.   முடிவில் வங்கி விற்பனையை மேற்கண்ட முறையில் நிறைவேற்றும்.

மூன்று விலைபுள்ளி கோரி விற்பனை

எந்தவொரு வங்கியும் இந்தவகையை பின்பற்றுவதில்லை.   குறைந்தபட்ச விலையை குறிப்பிட்டு  தன்னுடைய பட்டியலில்லுள்ள  அதாவது சொத்து வாங்க விருப்பமுள்ள  மூன்று நபர்களுக்கு அனுப்பி விலை கோருவர்.  பிறகு அதில் யார் அதிகமாக குறிப்பிட்டிருக்கிறாரோ அவருக்கு சொத்தை விற்பனை செய்வர்.  இதை சில ASSETS RECONSTRUCTION COMPANIES (ARC) நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதுவும் ஏற்கனவே விற்பனை தோல்வி அடைந்திருந்தால் அல்லது கடன்தாரர்  அதிக தொந்தரவு கொடுத்திருந்தால்.

இது தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள், கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்.  தெரிந்ததை பகிர்ந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்

இதையும் படியுங்கள்
                     அத்தியாயம் 7                  
                                               அத்தியாயம் 6
                                               அத்தியாயம் 5 
                             அத்தியாயம் 4 
                             அத்தியாயம் 3 
                             அத்தியாயம் 2 
                                              அத்தியாயம் 1 


பெண்களின் கணக்கு

நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி.    இது பெண்களிடம்தான் கேட்கப்பட்டது.

கணக்கில் அவர்கள் தடுமாறியது வருத்தமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் நாம் calculater  துணையின்றி கணக்கு போடுவதில்லை.   ஒருவர் 8 சவரன், 10 சவரன் என முயன்று முடிவில் விடை போர்டு சொன்னது.

ஒரு வேளை தங்கத்தின் விலையால் இவர்கள் தடுமாறினார்களோ?


சனி, ஜூலை 23

பனியன்



இன்று எனது மகன் பனியன் வாங்கி கொடு அப்பா, எனது நண்பன் போட்டுக் கொண்டு வருகிறான் என்றான். நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

எனது 2 ம் வகுப்பு படிக்கிறான். நான் 8 ம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில்  அப்பாவிற்கு தெரிந்த ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறேன்.  வீட்டில் இருந்தால் மற்ற நண்பர்களோடு விளையாடி வம்போடு வருவேன் என்பதால் அந்த ஏற்பாடு.   வேலை செய்த இடத்தில் எட்டணா கொடுத்தார்கள்.  அந்த அலுவலகத்தில் தேவையற்ற பேப்பர்கள் என சிலவற்றை ஒதுக்கினார்கள்.  அதை எல்லாம் கட்டி எடுத்து கடையில் போட்டு ரூ.6 பெற்றுக் கொண்டேன்.

என்ன வாங்கலாம் என யோசித்த போது  என் மகனை போன்று எனக்கும் அப்போது பனியன் ஆசை.  ரூ.5.50 க்கு ஒரு பனியன் வாங்கி வீட்டுக் சென்றேன்.  அலுவலகம் முடித்து வந்த அப்பாவிடம் நான் வாங்கிய பனியனை போட்டு சென்று நின்றேன்.  வந்ததே கோபம் அவருக்கு. 

ஏது பணம் என்றார். சொன்னேன். அருகில் அழைத்தார். போட்டிருந்த புது பனியனை கிழித்தார். யாரை கேட்டு வாங்கினாய்.  நான் வாங்கி தர மாட்டேனா என்றார். 

பிறகு வாங்கித் தரவில்லை,  நான் வேலைக்கு சென்று வாங்கிக் கொண்டேன். அந்த நாட்களில் ஆண்டுக்கு இரண்டு சட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை.  வேலைக்கு வந்த நான்காண்டுகள் இதே நிலமையே நீடித்தது.

ஆனால் ஒன்று,  அன்றெல்லாம் அப்பா அம்மாவிற்கு ரூ,2 தான் தருவார் காய்கறி வாங்கி கொள் என்று.  அதற்குள்தான் குடும்பம். 

பழங்கதை அது போகட்டும்.  என் மகனுக்கு பனியன் வாங்க கடைக்கு போகவேண்டும்

வியாழன், ஜூலை 21

நாய்

வளர்ப்பு நாய்க்கு aquafina  ஊட்டுகிறான் ஒரு சிப்பந்தி,  ஏ,சி.  கார், விமானப் பயணம் இது அமெரிக்க நாய்க்கு கிடைக்கும் மரியாதை,

நாம் சாக்கடை கலந்த நீர் பருகுகிறோம்

மிக உயர்ந்த மனிதராக வகுத்து அமெரிக்க வெளியுறவு துறை செயலர் சாதாரண வழியில் வராமல் எந்தவித தணிக்கையுமின்றி தனி கதவு வழியாக வெளியேறுகிறார்.  அவர் வந்த விமானம் அருகே cisf முதல் இந்திய அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.  அவரின் பாதுகாப்பை அமெரிக்க அதிகாரிகள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.   நமது காவல் துறை ஏவல் துறையாகுகிறது.  உச்சக்கட்ட பாதுகாப்பு

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி அமெரிக்காவிற்கு சென்றால் எல்லோரையும் போல் பயணிகளோடு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.  பெண்கள் சேலை அணிந்திருந்தால் கையை தூக்கு காலைத் தூக்கு என கேவலப் படுத்தப்படுகின்றனர்.

அது அமெரிக்கா
இது இந்தியா

மக்களே இந்த மண்ணில் நீ இப்படி வாழ எண்ணமா





சனி, ஜூலை 16

வரைமுறையற்ற கட்டிடங்கள் இடிப்பு

கடந்த இரு நாட்களாக வரைமுறையற்ற கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக ஒரு செய்தி.   கடந்த முறை இதே போன்றதொரு நிலை.  நீதிமன்ற தடையாணை  இன்னும் சில காரணங்களால் ஒத்திவைப்பு.  தடையாணை ஒவ்வொரு ஆண்டும் வேறு நீட்டிக்கப்பட்டது.

தியாகராய நகரில் மட்டும் floor space index (FSI) 1.5 பதிலாக 9 விகிதத்தில் உள்ளதாக செய்திகள் குறிப்பிடுக்கின்றன.  வாகன நிறுத்துமிடம் சுத்தமாக இல்லை.  நடப்பதற்கே இடமில்லை.

வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோள்.  இதே பகுதியில் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டும் நீதிமன்றமோ, அரசோ விழித்தெழவில்லை.

பாதுகாப்பு என்பது சிறிதும் கிடையாது இத்தகைய கட்டிடகளில்.  இங்கே பாதிக்கப்படுவது பொது மக்கள்.

தரை மற்றும் முதல் தளம் இருக்க வேண்டிய இடத்தில்  தரைகீழ் தளம், மற்றும் 6 முதல் 8 மாடிகள் வரை உள்ளன.  இதற்கு அங்கீகாரம் இல்லவே இல்லை ஆனால் வியாபாரம் நன்றாக நடக்கிறது.

இவர்களால் சராசரி நிலத்தின் விலை 10 மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது.  அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டால் விலை தனாக குறைந்து விடும்.

அங்கீகரிப்பட்ட திட்டப்படி கட்டிடங்கள் கட்டப்படுமா?

விலை குறையுமா? அல்ல

கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்குமா?
அரசு அவகாசம் தருமா?

வேடிக்கை பாருங்கள் மக்களே

வியாழன், ஜூலை 14

மும்பை குண்டு வெடிப்பு

காலை செய்தி தாளை பார்த்து அந்த பகுதியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.   குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் மராட்டியர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது எனவும், கடந்த தாக்குதலை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு எனவும், கசாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்ததோ எனவும் பேசினார்.

எது எப்படியோ பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள்

புதன், ஜூலை 13

1947 முதல் நடந்த ஊழல் பட்டியல்


எனக்கு வந்த மின்னஞ்ஞல்,  ஏதேனும் விடுபட்டது என்றால் சேர்த்து  சொல்லுங்கள்.  கோடிக்களுக்கு மதிப்பில்லை என்று சும்மா இருந்து விடாதீர்கள்.

செவ்வாய், ஜூலை 12

ஆத்தாவின் ஆட்டம் ஆரம்பம்

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து, நான் மகிழ்ந்தேன், அரசு மருத்துவமனை இன்னும் இரண்டு திறந்து விடுவார்கள் என்று.  ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருலட்சம் காப்பீடு என்று அவர்கள் சொன்னால் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் என்று அம்மா சொல்லி விட்டார்கள்.

காப்பீட்டு நிறுவனத்திற்கு கொண்டாட்டம்

இலவசங்களை வாரி வழங்க அறிவித்து விட்டேன்
மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், டெண்டர் கோரி விட்டேன்
பணம்தான் இல்லை, ஆனால் குடிமகன்கள் இருக்கிறார்கள்
அதனால் 4% VAT 5%  ஆனது.

இதனால் குடிமகன்களுக்கு திண்டாட்டம்

வெள்ளி, ஜூலை 8

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 7


மூன்றுவிதமான விலை மதிப்பீடு

ஒரு சொத்திற்கு மூன்று விலையா? ஏன்? எதற்கு?  வங்கிக்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

அப்படி ஏதும் இல்லை.  எந்தவொரு வங்கி அதிகாரியும்  வெளிபடையாக இயங்குபவர்.  விலையை அங்கீகரிப்பது ஒரு குழுதான்.  தனிப்பட்ட அதிகாரிக்கு எவ்வித அதிகாரமும் இதில் கிடையாது.  

விலை மதிப்பீடு செய்ய இதற்கென படித்த மதிப்பீட்டாளர்கள் இருக்கின்றனர்.  அவர்கள் அளிக்கும் விலை மதிப்பீட்டு விவரமே மூன்றுவிதமான விலை அவை

   ü           வழிகாட்டி விலை
   ü         சந்தை விலை
   ü         கட்டாய விற்பனை விலை

வழிகாட்டி விலை

இது அரசின் வழிகாட்டி விலை (guide line value)  தமிழகத்தை பொறுத்தவரை இந்த விவரத்தை தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் தளமான www.tnreginet.net  சொத்துக்களின் சர்வே எண் அளித்தோ அல்லது தெருவின் பெயர் அளித்தோ தெரிந்து கொள்ளலாம்.  இந்தவிலை சந்தை விலையாக இருக்க முடியாது ஒன்று அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.   பிறகு எதற்கு இந்த விலை? 

உதாரணத்திற்கு உஸ்மான் சாலையின் ஒரு கிரவுண்ட் வழிகாட்டி விலை உஸ்மான் சாலை விலை   ரூ.2.88 கோடி சந்தை விலை 5 கோடி முதல் 15 கோடி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆனால் நீங்கள் பத்திரம் வாங்க வேண்டியது வழிகாட்டி மதிப்பான  விலைக்குதான்.   இது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலில். 

உதாரணமாக இதே சாலையில் வங்கி ஒரு கிரவுண்ட் இடத்தை ரூ.15 கோடிக்கு விற்கிறது என்றால் வாங்குபவர் ரூ.15  கோடிக்கு பத்திர செலவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட முதல் நடவடிக்கையில் ரூ.15 கோடி கொடுத்திருந்தாலும் ரூ. 2,88 கோடிக்கு பத்திரச் செலவு செய்தால் போதுமானது.  ஆனால் வங்கியில் சொத்து வாங்கினால் ரூ. 15 கோடிக்க பத்திர செலவு செய்தே ஆகவேண்டும்.  தப்பிக்க இயலாது. 

தமிழ்நாட்டில்
முத்திரைக் கட்டணம்      8 சதவிதம்
பத்திரப் பதிவு கட்டணம் 1 சதவிதம்  ஆக 9 சதவீதம் செலவு செய்ய வேண்டும்.

ம்...........  இன்னொன்று,,,, கறுப்பு வெள்ளை பண பரிமாற்றம் என்னவென  யாருக்கும் சந்தேமிருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள்.  மேற்கண்ட நடவடிக்கையே அது.

சமயத்தில் சொத்து மதிப்பு ஒரு கோடி ஆனால் பத்திர செலவு  இரண்டு கோடிக்கு.  ஆம் அரசுக்கு வருமானம்.  வேறுவழியில்லை.

சந்தை விலை

தலைப்பே சொல்கிறது.  இது சந்தையில் உள்ள விலை ஆம் மேற்கண்ட ரூ.15 கோடி என்பது சந்தை விலை.  சரி வங்கி சொத்தை சந்தை விலைக்கு விற்க முடியுமா?  முடியும் ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. 

என்ன என்னுடைய சொத்தை நட்டத்திற்கு வங்கி விற்குமா? அதற்கு வங்கி பொறுப்பேற்குமா?

வங்கியின் நோக்கம் அதுவல்ல.  ஆனால் சொத்தை விற்க வேண்டும்.  கடன்தாரருக்கு சொத்தை விற்க விருப்பமில்லை அல்லது அதிகவிலைக்கு சொத்தை விற்க வேண்டும்.


 கட்டாய விற்பனை விலை

அடமான சொத்தை விற்றே ஆக வேண்டுமென்ற நிலை இருப்பதால்  சந்தை விலையை காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் குறைவான விலையை மதிப்பிடுவார்கள்.  இதுவே கட்டாய விற்பனை விலை.  இதன் நோக்கம் அதிகமான நபர்களை ஏலத்தில் பங்கு பெற செய்வதாகும்.  சமயத்தில்  சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு அடமான சொத்து ஏலத்தில் விற்கப்படும்.   இது எல்லா ஏலத்திலும் நடைபெறுவதில்லை. சொத்தின் இருப்பிடம் மற்றும் தன்மையை பொறுத்து அமைகிறது.


அடமான சொத்தை விற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். அடுத்து விற்பனை எப்படி நடைபெறும், எனது சொத்தை நானே எலத்தில் கலந்து கொண்டு எடுத்துக் கொள்ள முடியுமா? ஏலம் எப்படி நடை பெறும்

இதையும் படியுங்கள்
                     அத்தியாயம் 6
                                               அத்தியாயம் 5
                             அத்தியாயம் 4
                             அத்தியாயம் 3
                             அத்தியாயம் 2
                             அத்தியாயம் 1

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 6

Physical  Possession:

சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி நேரடியாகவோ அல்லது வங்கி சார்பில் முகவர் அமைத்தோ சொத்தை கையகப்படுத்தலாம்.  மத்திய வங்கி (Reserve Bank of India) இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Ø  வங்கி கையகப்படுத்துதல்
Ø  வங்கி முகவர் மூலம் கையகப்படுத்துதல்
Ø  வங்கி நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்
Ø  வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்

வங்கி அதிகாரி கையகப்படுத்துதல்

வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Chief Manager and above) தன் சக அதிகாரிகளோடு அடமான சொத்திற்கு வந்து உரிமையாளரோ அல்லது வாடகைக்கு இருப்பவரோ இருந்தால் அவர்க்ளை வெளியேற்றி சொத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வார்.  அவ்வாறு எடுக்கும் போது அங்குள்ள பொருட்களை கணக்கெடுத்து குறித்துக் கொள்ளவார்.  இந் நடவடிக்கைகள் அனைத்தும் நிழற்படம் எடுத்தோ, காணொளி படம் எடுத்தோ வைத்துக் கொள்வார்.   மேற்கண்ட கையகப்படுத்தும் நடவடிக்கைகளை குறிப்பெழுதி, இரு சாட்சி கையெழுத்து பெற்றுக் கொள்வார்.

தேவைப்படின் அடமான சொத்து தன் பொறுப்பில் உள்ளதால் காப்பீடு மற்றும் காவலுக்கு ஆள் நியமிப்பார்.  இதன் செலவுகள் அனைத்து கடன்தாரரே செலுத்த வேண்டும்.  இல்லையென்றால் அவர் கணக்கில் ஏற்றப்படும்

இது போன்ற நடவடிக்கைகளை ஒரு சில துணிச்சல்மிக்க வங்கி அதிகாரிகள் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

வங்கி, முகவர் மூலம் கையகப்படுத்துதல்

அஞ்சா நெஞ்சருக்கும் சில நேரங்களில் துணை தேவைப்படும் அப்போது முகவர்களை நியமித்துக் கொள்வர். இது ஒன்றுமில்லை கூட்டம் சேர்ப்பது.  முகவர்கள் வங்கி அதிகாரியின் சொல்படி நடப்பவர்கள்.  அனைத்து நடவடிக்கைகளும் வங்கியின் பேரால் நடைபெறுவதால்  வங்கி அதிகாரியின்றி முகவர்கள் இந் நடவடிக்கையில் நேரடியாக இறங்க மாட்டார்கள்.  இதில் அனைத்து வேலைகளையும் முகவர் செய்வார் வங்கி அதிகாரியின் கண்காணிப்பில்.  மற்றபடி முதல் நடவடிக்கையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும்.

வங்கி, நீதிமன்றம் மூலம் கையகப்படுத்துதல்

Section 14 ன் படி வங்கி தலைமை (பெருநகர) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (CMM) ஒரு மனு தாக்கல் செய்து அடமான சொத்தை கையகப்படுத்துவார்.  வங்கியின் சார்பில் வழக்கறிஞர் மேற்கண்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வார்.  அந்த மனுவில் மனு சொத்து வங்கியின் அடமான சொத்து எனவும், கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் கடனை செலுத்தவில்லை என்பதால் அடமான சொத்தை கையகப்படுத்த உத்திரவிடுமாறு கோருவார்.  மனுவின் இணைப்பாக தங்கள் கடன் கோரிக்கை மனு, வங்கியுடனான கடன் ஏற்பாடு பத்திரம், ஈட்டுறுதி பத்திரம், சொத்துப் பத்திரம், சமீபத்திய வில்லங்க சான்றிதழ், 13 (2) அறிவிக்கை நகல், அதன் ஒப்புகை சீட்டு, பெயரளவு கையகப்படுத்துதல் நடந்திருந்தால் அதன் ஆதாரங்கள், ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  இவை அனைத்தும் சரியாக இருந்தால் வங்கியின் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரி ஒருநாள் நீதிமன்றம் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டும்.  அதை ஏற்று அடுத்த பத்து நாட்களுக்கு நீதிமன்றம் சொத்தை கையக்கப்படுத்த ஆணை வெளியிடும். 

அவ்வாணையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து சொத்தை கையக்கப்படுத்த குறிப்பிட்டு இருக்கும்.   ஆணையரின் ஊதியமும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.  ஆணையர் காவல் துறை உதவியோடு சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார்.

அடமான சொத்து பூட்டப்பட்டிருந்தால் அதை உடைத்து திறக்கும் அதிகாரமும் வழக்கறிஞர் ஆணையருக்கு உண்டு.  இது குறித்தும் ஆணை வழங்க வேண்டும் என குறிப்பிடும் பட்சத்தில் நீதிமன்றம் இதற்கும் சேர்த்தே ஆணை வழங்குகிறது.

இந்நடவடிக்கைகளை நிழற்படம் படம் எடுத்தோ காணொளி படம் எடுத்தோ வழக்கறிஞர் ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

வங்கி மாவட்ட ஆட்சியர் மூலம் கையகப்படுத்துதல்

மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற அதிகாரம் உள்ளதால் அவரிடம் வங்கி கோரிக்கை மனு கொடுக்கலாம்.   மேற்கண்ட நடவடிக்கையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மூன்று நகல்களில் கையக்கப்படுத்தும் கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டும்.  இதை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் பரிசீலித்து மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு அனுப்பி வைப்பார்.  

மாவட்ட ஆட்சியர் அதனை ஏற்று சம்பந்தப்பட்ட அடமான சொத்து எல்லைக்குட்பட்ட வட்டாச்சியருக்கு (Thasildhar) சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் அளிக்குமாறு ஆணையிடுவார். 

வட்டாட்சியர், காவல் துறை உதவியோடு அடமான சொத்தை கையகப்படுத்தி வங்கியிடம் ஒப்படைப்பார்.  அவரும் இந்நடவடிக்கைகளை நிழற்படம் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பெடுத்தும் வைத்துக் கொள்வார்

சரி அடமான சொத்தை வங்கி கையகப்படுத்தாமல் விற்பனை செய்ய முடியுமா? முடியும் ஆனால் விற்பனைக்கு பிறகு வங்கி மேற்கண்ட நடவடிக்கை மூலம் சொத்தை ஏலத்தில் எடுத்துவருக்கு பெற்றுக் கொடுக்கும்.  அல்லது ஏலத்தில் எடுத்தவரே சொத்தை கையகப்படுத்திக் கொள்வார்.

அடுத்த அத்தியாயம் மூன்று விதமான விலைக் குறிப்புகள் எந்த விலையை வங்கி எடுத்துக் கொள்ளும் 




இதையும் படிக்கவும்   
                                              அத்தியாயம் 5
                                              அத்தியாயம் 4
                                              அத்தியாயம் 3
                                              அத்தியாயம் 2
                                              அத்தியாயம் 1

புதன், ஜூலை 6

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 5


சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை

கேட்பு அறிவிக்கையில் குறிப்பிட்ட 60 நாட்கள் முடிந்தவுடன் வங்கி  சொத்தை கையகப்படுத்த SARFAESI சட்டம் 2002 ல் கண்டுள்ள விதி 13 (4) படி அடமான சொத்தை கையகப்படுத்தும்.   இந்த நடைமுறையை இருவகையாக பிரிக்கலாம். முதலாவது பெயரளவு  (Symbolic) கையகப்படுத்தும் நடவடிக்கை இரண்டாவது (Physical) உண்மையில் சொத்தை கையகப்படுத்துவது ஆம் இதில் வீட்டின் உரிமையாளரை வீட்டிலிருந்து வெளியேற்றுவது.

இந்த நடவடிக்கையை சற்று விரிவாக பார்ப்போம்.  வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அதாவது முதன்மை மேலாளர்                (Chief Manager & above) தகுதிக்கு மேற்பட்டவர் சொத்துடமையாக்கல் அறிவிக்கையை குறிப்பிட்ட சொத்தின் மீது ஒட்டி அவ்வாறு ஒட்டியதற்கு ஆதாரமாக ஒரு நிழற்படமும் எடுத்துக் கொள்வார்.  பின்பு சொத்துடமையாக்கல் அறிவிக்கையை சொத்துடமையாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்குள் இரு தினசரிகளில் அதாவது ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி வருமாறு செய்வார்.

இதன் நோக்கம், அடமான சொத்தானது வங்கியில் அடமானத்தில் உள்ளது எனவும்,  அதன் நிலுவைத் தொகை இவ்வளவு எனவும்,  அவ்வடமான சொத்தின் மீது பொது மக்கள் எவ்வித உடன்படிக்கையோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ள கூடாது எனவும் அவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வங்கியை கட்டுப்படுத்தாது எனவும், வேறு ஏதேனும் கடனுக்கு இணைப்பாணை வாங்கினால் அது மேற்படி வங்கியின் கடனுக்கு பிறகே செல்லுபடியாகும் என பொது மக்களுக்கு அறிவிப்பதாகும்.


தினசரியில் வெளியாகும் அறிவிக்கை ஒன்று அம் மாநில மொழியில் இருக்க வேண்டும்.   ஆங்கில தினசரியில் வருவது ஆங்கில மொழியில் இருக்க வேண்டும்.   மாநில மொழி தினசரியில் ஆங்கிலத்தில் வெளியிட கூடாது.   அம்மாநில மொழியில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்க வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம்.  இதற்காகும் செலவு கடன்தாரர் தலையில்.   ரூ.15000 முதல் ரூ,25000 வரை ஆகலாம்.  இது வங்கி தேர்ந்தெடுக்கும் தினசரியை பொறுத்து அமையும்.  பொதுவாக இவ் விளம்பரங்களை தமிழ்நாட்டை  பொறுத்தவரை The New Indian Express மற்றும் தினமணி தினசரியில் காணலாம்.

இந்த சொத்துடமையாக்கல் வேலை முடிந்தவுடன் வங்கி 30 நாட்கள் காத்திருக்கும்.   அதாவது சொத்தை விற்பனை செய்வது தொடர்பான அறிவிக்கையை வெளியிட

சரி, இந்த 30 நாட்களில் வங்கி அமைதியாக இருக்குமா என்றால் இல்லை.  என்ன செய்வார்கள்.  கடன் வாங்கிய நீங்கள் ஏதாவது பணம் கட்ட நடவடிக்கை எடுக்கிறீர்களா என கவனிப்பார்கள்.  பிறகு அடமான சொத்தை விலை மதிப்பீட்டாளாரை கொண்டு விலை நிர்ணயம் செய்ய கோருவர்.    Valuer சொத்தை பார்வையிட்டு வங்கி விலை மதிப்பீட்டை அளிப்பார். மதிப்பீட்டாளர் மூன்று விதமான விலைகளை அளிப்பார்.  வங்கி குழு (committee) அதை பரிசீலித்து  விற்பனைத் தொகையை (Reserve Price) நிர்ணயம் செய்யும்

வங்கி கடன்தாரர் மற்றும் ஜாமீன்தார்ருக்கு அடமான சொத்தை விற்க இருப்பதாகவும் எனவே கடன்தார்ரோ அல்லது ஜாமீன்தார்ரோ அடுத்த 30 நாட்களுக்கு கடன் தொகையை செலுத்தி சொத்தை மீட்டுக் கொள்ள வேண்டுமென்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் சொத்தை வங்கி பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய நேரிடும் என்ற விற்பனை அறிவிக்கையை அனுப்பி வைக்கும்.

வங்கி அடுத்து என்ன செய்யும் – விற்பனை
அதற்கு முன் PHYSICAL POSSESSION என்றால் என்ன
 மதிப்பீட்டாளரின் மூன்று விதமான  விலை ( VALUATION)  
என்றால் என்ன
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்


இதையும் படிக்கவும் அத்தியாயம் 4
                                              அத்தியாயம் 3
                                              அத்தியாயம் 2
                                              அத்தியாயம் 1

               

செவ்வாய், ஜூலை 5

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 4



நீங்கள் நீதிமன்றதை அணுகியதால் வங்கி பெரும்பாலும் எவ்வித நிவாரணமும் வழங்க இந்நிலையில் தயங்கும்.  உங்களுக்கு உள்ள ஒரே வழி நீதி மன்றம்தான்.  திரும்ப வழக்கறிஞர் மூலம் நிவாரணம் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும்.   தங்கள் கோரிக்கையை நீதிமன்றம் செவிமடுக்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம்.  செவிமடுத்தால் கால அவகாசம் கிடைக்கும் இல்லையென்றால்

கடன் வசூல் மேல்முறையீட்டு ஆணையம், சென்னை எத்திராஜ் சாலையில் உள்ளது.  இது நான்கு மாநிலங்களில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு தங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்.  அதாவது கடன் வசூல் தீர்ப்பாயத்தின் கட்டளைகளை தளர்த்தலாம் அல்லது கால அவகாசம் நீட்டிக்கலாம்.  சரி இங்கு வழங்கிய கால அவகாசத்திலும் தங்கள் நிதி நிலைமை சீரடையாமல் கடன் செலுத்த இயலவில்லை எனில்.  ஆம் இருக்கவே இருக்கு உயர் நீதி மன்றம்.

உயர் நீதி மன்றமும் தங்கள் சார்பாக நீதி வழங்கலாம்.  அதாவது சொத்தை கையகப்படுத்த தடையாணை கிடைக்கும்.  இதற்குமேல் உச்ச நீதி மன்றம்...  ஆம் பணமிருந்தால் நிவாரணம் தொடரும்...

நிவாரணத்தின் விலை

நீதி மன்ற கட்டணம் தங்களின் நிலுவைத் தொகைக்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு நீதி மன்றத்திலும்.   வழக்கறிஞர் சேவை கட்டணம் ஒவ்வொரு நிலையிலும்.

SARFAESI சட்டம் எப்போது செல்லுபடியாகது

தங்களது நிலுவைத் தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள போது மேற்படி சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது.  வட்டித் தொகை மட்டும் நிலுவையில் உள்ளபோது.

அடுத்தகட்டம்
தாங்கள் எவ்வித பணமும், கடனை திரும்பி செலுத்துவதற்கான ஆர்வமும் காண்பிக்காத பட்சத்தில் அடமான சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு செல்லும்.   அது எப்படிபட்டது என்ன செய்வார்கள் அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்

திங்கள், ஜூலை 4

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 3


அத்தியாயம் – 3

SARFAESI நோட்டிஸ் அதாவது கேட்பு அறிவிக்கை பெற்றவுடன் நாம் குறைகளை சுட்டி காட்டலாம். விளக்கம் கேட்கலாம். கணக்கு கேட்கலாம்.  அதற்கு வங்கி ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதி. இதில் காலதாமதம் அல்லது எவ்வித பதிலும் கிடைக்க வில்லை என்றால்.  நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தை அணுகும் போது  இக்குறைபாட்டை தெரிவித்தும் நிவாரணம் கோரலாம்


SARFAESI நோட்டிசை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாமா?  செல்லலாம் அதனால் சொத்தை கையகப்படுத்தும் நடைவடிக்கை தள்ளிப் போடப் படுகிறது.

அதற்கு முன் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அறிவிக்கையை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை நேரில் சந்தித்து தேவையான விளக்கங்கள்/சந்தேகங்களை கேளுங்கள்.  உங்கள் நிலையை விளக்கி கூறி கால அவகாசம் கேளுங்கள். அதையும் கடிதம் மூலம் தெரிவித்து அதற்கு ஒப்புகை பெற்றுக் கொள்ளுங்கள்.  ஆனால் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவதாக நீங்கள் கூறினால்தான் வங்கி அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்கையை தள்ளிப் போடுவார். இல்லையெனில் சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி விடுவார்.

சரி, நான் மூன்று தவணைகளை செலுத்தி விட்டு மீண்டும் ஏதோ ஒரு சூழ்நிலையால் திரும்ப தவணைகளை சரிவர செலுத்த இயலவில்லை. அதற்குள் முதலில் அனுப்பிய நோட்டிஸ்/அறிவிக்கை அனுப்பி ஆறு மாதமோ ஒரு வருடமோ ஆகி விட்டது.  வங்கி  அதே நோட்டிசை மோற்கோள் காட்டி கையக்கப்படுத்தும் நடவடிக்கை எடுக்கலாமா? அல்ல அது காலாவதி ஆகி விட்டதா?

நினைவூட்டு அறிவிக்கை

காலாவதி ஆகவில்லை, வங்கி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்,  ஆயினும் நீதிமன்ற வழி காட்டுதலின் படி அனைத்து வங்கிகளும் ஒரு நினைவூட்டை கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு அனுப்புகிறது.  அதை  interim notice அல்லது pre takeover notice என்கிறார்கள்.  இந்த அறிவிக்கை தங்களுக்கு கிடைத்த எழு நாட்களுக்கு பிறகே வங்கி சொத்தை கையக்கப்படுத்தும்.  இதை தங்களுக்கு அனுப்பிய அறிவிக்கையில் தெரியப்படுத்தி இருப்பார்கள். இதில் ஏற்கனவே அனுப்பிய அறிவிக்கையை மேற்கோள் காட்டி, ஏதேனும் தொகை செலுத்தியிருந்தால் அதையும் குறிப்பிட்டு, தற்போதைய நிலுவைத் தொகையை தெரிவித்திருப்பார்கள் இல்லையெனில் முன்பு அனுப்பிய அறிவிக்கையையில் கண்டுள்ள தொகையை குறிப்பிட்டு மேற்கொண்டுள்ள வட்டி மற்றும் இதர செலவினங்களை நாளது தேதியிலிருந்து செலுத்த வேண்டுமென குறிப்பிட்டு இருப்பார்கள்.

கேட்பு அறிவிக்கை அனுப்பி மூன்றாண்டுகள் ஆகியிருந்தால், அவ்வறிக்கை காலவாதியாகி விட்டது என குஜராத் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.   எனவே வங்கி 13 (2) நோட்டிசை கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரருக்கு புதியதாக அனுப்ப வேண்டும்.

நிவாரணம் என்ன?

என்னிடம் பணமே இல்லை, பணம் திரட்ட ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகும்.   வங்கியும் மேற்கொண்டு கால அவகாசம் அளிக்க தயாராக இல்லை என்ன செய்யலாம் எனது கனவு இல்லத்தை காக்க?

தங்கள் கடன் ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமானது என்றால் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் மூலம் நிவாரணம் கோரலாம். எத்தகைய நிவாரணம் கிடைக்கும்?

நீதிமன்றம் கடன் தொகையில் 10%  அல்லது 25%  தொகையோ அல்லது தொகை ஏதும் செலுத்த சொல்லாமலும் தடையாணை வழங்கும்.  நீதிமன்ற உத்தரவுப் படி தாங்கள் தொகையை செலுத்தும் பட்டசத்தில் தடையாணை வழக்கை முடிக்கும் வரை தொடரலாம்.  அவ்வாறு பணத்தை செலுத்தாத பட்சத்தில் நீதிமன்ற குறிப்பிட்ட கெடுவுக்கு பிறகு தடையாணை தானாக முடிவு பெறும்.

மேற்படி தொகையை ஒரே தவணையாகவோ அல்லது இரண்டு மூன்று தவணையாகவோ ஒன்று முதல் மூன்று மாத கால அவகாசத்திற்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்திரவிடும்.

நீதிமன்ற உத்திரவுபடி ஒரே தவணை மட்டும்தான் செலுத்த முடிந்தது மேற்கொண்டு செலுத்த இயலவில்லை. திரும்ப நீதிமன்ற அணுகலாமா அல்லது வங்கியை அணுகலாமா. அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இதையும் படிக்கவும் அத்தியாயம் 1
                                              அத்தியாயம் 2

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...